Wednesday 12 July 2017

STR கிளை 11-7-17 மாதந்திர கூட்ட செய்தித்துளிகள்



தோழர் சுகுமாரன் பேசுகையில் CCA அலுவலகத்தில் வேலைகள் மோசமாக நடைபெற்று வருவதாகக் கூறினார். அதன் தாமதப் போக்கைக் கண்டித்து நமது சங்கங்கள் வரும் 19ந்தேதி காலை 10 மணிக்கு எதிராஜ் சாலையில் உள்ள CCA அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்திருப்பதாகக் கூறி நமது உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். மேலும் பேசுகையில் தமிழ் மாநில சங்கம் DOT யின் “EXTRA INCREMENT” RECOVERY சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருப்பதாகக் கூறினார். இதனால் பாதிக்கப்பட்ட தோழர்கள் மாநிலச்சங்கம் கேட்கும் தகவல்களை உடனடியாக தருமாறுக் கேட்டுக்கொண்டார்.
தோழர் D.S. ராமலிங்கம் பேசுகையில் CCA அலுவலகத்தில் 15700 PPOக்கள் வெளியிடப்பட்டு விட்டதாகவும், 579 பேர்களுக்கு இன்னும் வெளியிட வேண்டியிருப்பதாகவும் கூறினார். அவர்கள் PPOக்களை பழைய விலாசத்திற்கே அனுப்புவதாகவும் கூறினார். நமது CHQ 78.2% பென்ஷன் ரிவிஷன் அரியர்ஸ் 1.1.2007 முதல் கிடைக்க நீதிமன்றம் செல்ல இருப்பதாகக் கூறினார். நீதிமன்ற செலவுகள் அனைத்தையும் CHQ வே ஏற்றுக்கொள்ள இருப்பதாக கூறினார்.



தோழர் முத்தியாலு பேசுகையில் BSNL ஊழியர்களுக்கு ஊதிய விகிதங்கள் மாற்றி அமைக்கப்படவேண்டும். லாபமில்லை என்று கூறி அதை மறுப்பது ஞாயமில்லை என்று கூறினார்.  7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி BSNL பென்ஷனர்களுக்கு பென்ஷன் ரிவிஷன் வேண்டும் என்று நாம் கோரி வருகிறோம் என்றார். CCA அலுவலகத்தில் பென்ஷனர்களை மதிப்பதில்லை என்றும், சரியான முறையில் தகவல்களைத் தருவதில்லை என்றும் கூறினார். மாநில நிர்வாகிகளுக்குக் கூட நல்ல முறையில் பதில் தருவதில்லை என்றும் கூறினார். ஆகையால் இதை கண்டித்து வருகிற 19ந்தேதி எதிராஜ் சாலையில் உள்ள CCA அலுவலகம் முன்பாக தமிழ் மாநில சங்கமும், சென்னைத் தொலைபேசி மாநில சங்கமும் இணைந்து மாபெரும் தர்ணா போராட்டம் நடத்த இருப்பதாகக் கூறினார். இதற்கு நமது STR  கிளையிலிருந்து 200 தோழர்கள் வரவேண்டும் என்று கூறினார்.
தோழர் S. ராமநாராயணன் பேசுகையில் AIFPA வின் அனைத்திந்திய மாநாடு வரும் 21 & 22 தேதிகளில், T. NAGAR ல் நடக்க இருப்பதாகக் கூறி, நமது தோழர்கள் அதில் கலந்து கொள்ளவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
தோழர் L. கிருஷணமூர்த்தி பேசுகையில் பென்ஷனர் பிரச்னைகளை சரியாக தீர்க்காத CCA அலுவகத்தை எதிர்த்து கடுமையாக் போராட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.