Monday, 23 May 2022

நிர்ணயிக்கப்பட்ட மருத்துவப்படி பெற புதிதாக வந்துள்ள உத்தரவு

 







இந்த உத்தரவுப் படி 

 மேலே உள்ள 3 படிவங்களை நிரப்பி  அத்துடன் PPO நகல்,அரசால் அங்கீகரிக்கப்பட்ட இருப்பிடச்சான்று ,MRS அட்டை Surrender certificate, இவைகளை இணைத்து SSA அலுவலகம் மூலம் அனுப்பவேண்டும்.


Sunday, 22 May 2022

தொலைத்தொடர்புத்துறை ஓய்வூதியர்களும் மருத்துவத்திட்டங்களும்


தொலைத்தொடர்புத்துறை ஓய்வூதியர்களும் மருத்துவத்திட்டங்களும்.

தொலைத்தொடர்புத்துறையில் இப்போதுள்ள ஓய்வூதியர்களை 3 வகையினராகப் பிரிக்கலாம்.

1.   தபால் தந்தி துறையில் பணியேற்று தபால் தந்தி துறை அல்லது தொலைத்

தொடர்புத்துறையில் பணி நிறைவு செய்து / விருப்ப ஓய்வு பெற்று  ஓய்வூதியம் பெறுவோர். இவர்கள் மத்திய அரசு ஓய்வூதியர் அல்லது CDA PENSIONERS

2.   தபால் தந்தி துறையில் பணியேற்று தபால் தந்தி துறையிலும் தொலைத்தொடர்புத்துறையிலும் பின்னர் BSNLலில் சுவீகரிக்கப்பட்டு (ABSORBED IN BSNL) BSNLலில் ஊழியர்களாக பணி நிறைவு செய்து / விருப்ப ஓய்வு பெற்று மத்திய அரசின்   ஓய்வூதியம் பெறுவோர். இவர்கள் IDA PENSIONERS.

3.   இவர்கள்  தவிர BSNL லில் பணி ஏற்று BSNL ஊழியர்களாக பணி       

நிறைவு செய்து / விருப்ப ஓய்வு பெற்று   EPF ஓய்வூதியம் பெறுவோர்.

 

முதல் வகையினரான மத்திய அரசு ஓய்வூதியர் அல்லது CDA PENSIONER களுக்கு மட்டும் உள்ள தனியான மருத்துவ திட்டம் CGHS.

 

இரண்டாம் வகையினர்  BSNL MRS (BSNL Medical Reimbursement Scheme)  திட்டத்தையோ அல்லது CGHS. திட்டதையோ  தேர்ந்தெடுக்கலாம். CGHS ல் இணைந்த பின் MRS க்கு மாற முடியாது.

 

மூன்றாவது வகையினர்   அதாவது  EPF ஓய்வூதியம் பெறுவோர் CGHS ல் இணைய முடியாது. இவர்கள் BSNL MRS திட்டத்திலேயே தொடர்வார்கள்.

 

மருத்துவ வசதிகள் :

     முதல் வகையினர் CGHS  வரம்புக்குள் (CGHS மருத்துவ மனையை சுற்றிய 5 கி மீ. பகுதி) வசித்தால்  உரிய கட்டணம் செலுத்தி CGHS மூலம் உள் மற்றும் வெளி மருத்துவ சிகிச்சை பெறலாம். இவர்கள்  நிர்ணயிக்கப்பட்ட மருத்துவப்படி பெற முடியாது. CGHSல் இணைந்த ஒருவர் அதன் வரம்புக்குள் வராத பகுதியில் வசித்தால் அவரின் விருப்பப்படி அவர் CGHS ல் உள் மற்றும் வெளி மருத்துவ சிகிச்சையோ, அல்லது CGHS ல் உள் மருத்துவ சிகிச்சையும் வெளி மருத்துவ சிகிச்சைக்குப் பதிலாக நிர்ணயிக்கப்பட்ட மருத்துவப் படியும் பெறலாம். இந்த வெளி மருத்துவ விருப்பத்தை ஒரே ஒரு முறை மட்டும் மாற்றிக்கொள்ளும் வசதி உண்டு.

இரண்டாம் வகையினர்     

1.   BSNL MRS (BSNL Medical Reimbursement Scheme) திட்டத்திலேயே தொடரலாம்.

2.   CGHS வரம்புக்குள் வரும் பகுதியில் வசிப்பவர்கள்

     BSNL MRS திட்டத்திலிருந்து முற்றிலும் விலகி, (அதாவது BSNL MRS அட்டையை BSNL நிர்வாகத்திடம் ஒப்படைத்து, SURRENDER CERTIFICATE பெற்று), BSNL லிருந்து திரும்பப் பெறக் கூடிய உரிய கட்டணம் செலுத்தி முற்றிலுமாக CGHS திட்டத்தில் இணைந்து உள் மற்றும் வெளி மருத்துவ சிகிச்சைகளை CGHS மூலம் பெறலாம். இவர்கள் நிர்ணயிக்கப்பட்ட மருத்துவப்படி பெற முடியாது.    (CGHS க்கு செலுத்த வேண்டிய கட்டண விகிதங்கள் குறித்தும் அதனை BSNL லிருந்து திரும்பப் பெறும் முறை பற்றியும் கீழே தரப்பட்டுள்ளது.)

3.   CGHS வரம்புக்குள் வராத பகுதியில் வசிப்பவர்கள் மட்டும்,

   1.BSNL MRS திட்டத்திலிருந்து முற்றிலும் விலகி, மேலே கூறிய உரிய கட்டணம் செலுத்தி CGHS திட்டத்தில் இணைந்து உள் மற்றும்  மருத்துவ சிகிச்சையை பெறலாம் அல்லது உள் மருத்துவ சிகிச்சையை மட்டும்   CGHS மூலம் பெற்று வெளி மருத்துவ சிகிச்சைக்கு பதிலாக நிர்ணயிக்கப்பட்ட மருத்துவப்படி பெறலாம். இந்த வெளி மருத்துவ விருப்பத்தை ஒரே ஒரு முறை மட்டும் மாற்றிக்கொள்ளும் வசதி உண்டு.

   2. BSNLMRS திட்டத்திலிருந்து முற்றிலும் விலகி CGHS ல் இணையாமலேயே நிர்ணயிக்கப்பட்ட மருத்துவப்படி மட்டும் பெறலாம்.        

இத்தனை விருப்பத்தேர்வுகள் உண்டு.அவரவர் வசதிப்படி ,விருப்பப்படி தேர்வு செய்யலாம்.

இரண்டாம் வகையினர்   முன்னே இருக்கும் 3 விருப்பத்தேர்வுகள்  படி மருத்துவ வசதி  பெற அவர்கள் செய்யவேண்டியவை  :

விருப்பத்தேர்வு 1

         செய்யவேண்டியது ஏதும் இல்லை. MRS அட்டையை பத்திரமாக வைத்து MRS விதி முறைகளின் படி சிகிச்சைகளை. எடுத்துக்கொள்ளலாம்.

 

விருப்பத்தேர்வு 2

    முதலில் BSNLMRS அட்டையை BSNL நிர்வாகத்திடம் ஒப்படைத்து ஒப்படைப்பு சான்றிதழ் (SURRENDER CERTIFICATE)பெறவேண்டும். பிறகு நமது ஓய்வூதிய உத்தரவு மற்றும் பென்ஷன் மாற்ற உத்தரவுடன் (ஏதேனும் இருப்பின்) இதனை இணைத்து CCA தமிழ் நாடு  அவர்களுக்கு CGHS ல் இணைய நமது IDA சம்பளத்திற்கிணையான CDA சம்பள விகிதத்தை (PAY SCALE MAPPING)கேட்டு பெறவேண்டும். உரிய கட்டணம் செலுத்தி CCA விடமிருந்து கிடைக்கப்பெற்ற கடிதத்துடன் திருச்சி, சென்னை, நெல்லை யில் உள்ள  ஏதாவது ஒரு CGHS அலுவலகம் சென்று  CGHS ல் இணைவதற்கான விண்ணப்ப படிவத்தினை உரிய ஆவணங்களுடன் (கீழே தரப்பட்டுள்ளன) சமர்ப்பிக்கவேண்டும். அவர்கள் தற்காலிக அடையாள அட்டை( CGHS index card to be downloaded in A4 sheet) மற்றும் நிரந்தர  பிளாஸ்டிக் அட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள வழி காட்டுவர். அடையாள அட்டை பதிவிறக்கம் செய்து கொண்டு இந்தியாவில் உள்ள எந்த ஒரு CGHS மருத்துவ மனையிலும் உள் மற்றும் வெளி மருத்துவ  சிகிச்சை பெறலாம். 

விருப்பத்தேர்வு 3(1)

     விருப்பம் 3 படி ஒருவர்  CGHS ல் இணைய , “நான் CGHS வரம்புக்குள் வராத பகுதியில் வசிக்கிறேன். ஆனாலும் CGHS க்கு  உரிய கட்டணம் செலுத்தி உள் மருத்துவ சிகிச்சையும் வெளி மருத்துவ சிகிச்சைக்குப் பதிலாக நிர்ணயிக்கப்பட்ட   மருத்துவப்படியும்  பெறுகிறேன்”  என்ற விருப்பத் தேர்வினை விருப்ப விண்ணப்ப படிவத்தில்[ஆப்ஷன் 2(I)] குறித்து CGHS வரம்புக்கு உட்படாத பகுதில் வசிப்பதற்கான சான்றளிப்பையும் (undertaking) CCA தமிழ்நாடு அவர்களுக்கு அனுப்ப வேண்டும். அவர்களிடமிருந்து பெற்ற IDA சம்பளத்திற்கிணையான CDA சம்பள விகித பட்டியலை  (PAY SCALE MAPPING) இணைத்து விருப்பம் 2ல்  கண்டபடி  CGHS அலுவலகத்தில்  விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போதே வெளிப்புற மருத்துவ சிகிச்சைக்கு பதில் நிர்ணயிக்கப்பட்ட மருத்துவப்படி வேண்டும் என கோரும் கடிதத்தினையும் இணைத்து  CGHS ல் இணைந்து CGHS மூலம் உள் மருத்துவ சிகிச்சையும், வெளி  மருத்துவ சிகிச்சைக்கு பதிலாக நிர்ணயிக்கப்பட்ட மருத்துவப்படியும் பெறலாம்

விருப்பத்தேர்வு 3(2) 

    BSNLMRS அட்டையை BSNLநிர்வாகத்திடம் ஒப்படைத்து பெற்ற ஒப்படைப்பு சான்றிதழ் (SURRENDER CERTIFICATE), ஓய்வூதிய உத்தரவு மற்றும் பென்ஷன் மாற்ற உத்தரவுடன்(ஏதேனும் இருப்பின்), PPO ல் உள்ள முகவரியில் மாற்றம் இருந்தால் சரியான முகவரி உள்ள ஆதார்  அட்டையின் நகல் இவைகளை  இணைத்து CCA     தமிழ் நாடு அவர்களுக்கு, நான் CGHS வரம்புக்குள் வராத பகுதியில் வசிக்கிறேன். CGHS மூலம் உள் மற்றும் வெளி மருத்துவ சிகிச்சை பெறாமல், நிர்ணயிக்கப்பட்ட   மருத்துவப்படி மட்டும் பெறுகிறேன்” என, OPTION FORM ல் [ஆப்ஷன் 2(II)] என குறித்து UNDERTAKING FORM உடன் அனுப்பவேண்டும்.  அவர்கள் நமது ஓய்வூதியத்துடன் நிர்ணயிக்கப்பட்ட மருத்துவப்படி கிடைக்க ஆவன செய்வார்கள்.   

     இப்போது ஓய்வூதிய விண்ணப்பத்திலேயே மருத்துவத் திட்டத்திற்கான விருப்பம் கேட்கப்படுகிறது. BSNL MRS திட்டத்தில் இருந்து CGHS வசதிக்கு மாறுவதாக ஓய்வூதிய விண்ணப்பத்துடன் விருப்பம் தெரிவித்திருந்ததால்.  PPO வில் மருத்துவப்படி மாதம் ரூ.1000... என்று குறிப்பிடப்படுகிறது.





CGHS ல் இணைய தேவையான  ஆவணங்கள்

1 ,CGHS விண்ணப்பம் (கீழே தரப்பட்டுள்ளது.)

2. BSNL MRS Surrender Certificate

3. CCA விடமிருந்து பெறப்பட்ட சம்பள விகிதப்பட்டியல்

4. CGHS க்கு பணம் செலுத்திய ரசீது நகல்.

5. CGHS ல் இணையும் குடும்ப நபர்களின் ஆதார் நகல் (Only Dependents)

6. இணைபவர்கள்  ஒவ்வொருவருக்கும் இரண்டு  பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்

7. PPO நகல் மற்றும் பென்ஷன் மாற்ற உத்தரவு நகல்(இருப்பின்)

8  நிர்ணயிக்கப்பட்ட மருத்துவப்படி கோரினால் அதற்கான விண்ணப்பக்கடிதம்.

9. இணைபவர்களின் இரத்த வகைக்கான ஆய்வுக்கூட சான்று.(விரும்பினால்)

CGHS APPLICATION FORM


 


நடைமுறையில் உள்ள CGHS கட்டண விகிதங்கள்







              For life time subscription, contribution is to be paid for 10 years (that is)total amount to be paid is Monthly contribution Multiplied by 120 (Eg) If monthly contribution is 250 then for life time amount to be paid is 250X120=30000, Along with this Rs 30/- is to be added as cost of plastic card. Payment should be made on line

CGHS க்கு செலுத்திய கட்டணத்தை  BSNL லிருந்து திரும்பப் பெறுவதற்கு 

1.CGHS க்கு கட்டணம் செலுத்திய ரசீது

2.FORMAT IV. (கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

3.PPO நகல்.

4.CGHSஅடையாள அட்டை நகல்.

5.CGHS Index card copy (Down loaded in A4 Sheet.)

6.வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் / Cancelled Cheque leaf. 

7.MRS surrender certificate copy.

    இவைகளை இணைத்து PGM மதுரை அவர்களுக்கு  CGHS க்கு செலுத்திய

கட்டணத்தை திருப்பித்தருமாறு கோரி மனு அனுப்பவேண்டும்.

      இவ்வாறு BSNL லிருந்து CGHS க்கு செலுத்திய கட்டணத்தினை  ஒரே ஒரு முறை மட்டுமே திரும்ப  பெறமுடியும்.. அதனால் கட்டணத்தை வாழ்  நாள் கட்டணமாக         (10 ஆண்டுக்கு) செலுத்துவதே சிறந்தது. ஏனெனில் முதல் முறை 10 ஆண்டுக்கு குறைவான காலத்திற்கு CGHS கட்டணம்  செலுத்தி அதனை BSNL லிருந்து திரும்பி வாங்கியபின் மறுபடியும் கட்டணம்  செலுத்தி CGHS திட்டத்தை புதுப்பித்தால் இரண்டாவது முறை கட்டிய பணத்தை  BSNL லிருந்து திரும்ப பெறமுடியாது.

CGHS க்கு கட்டணம் செலுத்திய ரசீது நகலினை BSNL லிருந்து பணம் திரும்பக் கிடைக்கும் வரை பாதுகாப்பது நல்லது.

 


 

 

 

 

 

 


 

ஓய்வூதியர் தினம் 1-5-22

           1-5-2022 ஞாயிறு அன்று மதுரையில் ஓய்வூதியர் தினமும் சிறப்பு பொதுக்குழு கூட்டமும் மாவட்டத்தலைவர் திரு G R தர்மராஜன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. பல மகளிர் உட்பட சுமார் 250 ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர். தமிழ்  தாய் வாழ்த்து, அஞ்சலிக்குப்பின், தலைவர்  தன் உரையில் மே தினத்தின் சிறப்புகளைப்  பற்றியும் 28-4- 22 ல் விழுப்புரத்தில் நடைபெற்ற மாநில செயற்குழு பற்றியும் சிறப்பாக விளக்கினார். பின்னர் 70 வயதை நிறைவு செய்த ஓய்வூதியர்கள்  கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து நடை பெற்ற பொதுக்குழுவில் மதுரை மாவட்டத்தின் 14 மாவட்டமாநாடு குறித்து விவாதிக்கப்பட்டு 11-6-2022 அன்று மாநாட்டினை ஆரப்பாளையம் குரு திரையரங்கம் அருகில் உள்ள ஸ்ரீ லெட்சுமி மஹாலில் ,

 தமிழ் மாநிலச்செயலர் தோ  .  R. வெங்கடாசலம், 

மத்திய சங்க பொருளாளர்    தோ . T S விட்டோபன் 

அவர்களின் சிறப்புரையுடன் நடத்துவது, மாவட்ட மாநாடு நன்கொடை ரூ 300,அகில இந்திய மாநாடு நன்கொடை ரூ 50 விருந்தினர் கட்டணம் ரூ 100 வசூலிப்பது என்ற செயற் குழு முடிவு ஏற்கப்பட்டது. நன்றி உரை, நாட்டுப்பாண்க்குப் பிறகு சிறப்பான மதிய  உணவுடன் கூட்டம் நிறைவு பெற்றது.

  இந்நிகழ்ச்சியின் சில  புகைப்படங்கள் கீழே.















Friday, 11 March 2022

பென்ஷன் மாற்றத்திற்கான நமது முயற்சிகள்.

 பென்ஷன் மாற்றத்திற்கு வழக்கு தொடுத்ததுடன் நில்லாத   நம்  முயற்சிகள் 

திருச்சியில் நமது சங்க கூட்டத்தில் நமது அழைப்பின் பேரில் கலந்து  கொண்ட ஹிந்து பத்திரிகையின் மூத்த நிருபர் திரு  C ஜெய்சங்கர் அவர்கள் நமது கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து ஹிந்து பத்திரிகையில் நமது                கோரிக்கை  குறித்த செய்தி வெளியிட்டதுடன் தொலைத்தொடர்புத்துறை செயலர் திரு  K ராஜாராமன் அவர்களுடனும் நமது கோரிக்கையின் நியாயம் பற்றி பேசி நமக்கு உதவும்படி கோரியுள்ளார். அவருக்கு நமது நன்றிகள்.  

நமக்கு உதவும் படி வேண்டி பாராளுமன்ற உறுப்பினர்களை அணுகியுள்ளோம். 

1 . ஆந்திரா, காக்கிநாடா பாராளுமன்ற உறுப்பினர் 

திருமதி. வாங்க கீதா விஸ்வநாத் (Smt Vanga Geeta Viswanath) அவர்கள்

நமது நியாயமான கோரிக்கைகளை  பாராளுமன்றத்தில் பேசியதோடல்லாமல் நமது துறை மத்திய  அமைச்சர், தொலைத்தொடர்புத்துறை தலைவர், ஊய்வூதியார் நலத்துறை செயலர் ஆகியோரையும்  சந்தித்து விவாதித்து சாதகமான முடிவெடுக்கும்படி அழுத்தம் கொடுத்துள்ளார். அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றிகள்.  





2 ஆந்திரா , அனந்தபூர்   பாராளுமன்ற உறுப்பினர் 

BSNL ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய மாற்றம் 01-01-2017 லிருந்து,  ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி செய்ய வேண்டும் என்று ஆந்திர MP ( அனந்தபூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ) திரு தலரி ரங்கையா அவர்கள் நம் துறை அமைச்சர் மாண்புமிகு அஷ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு  கடிதம்எழுதியுள்ளார் .   இது விஷயமாக விரைவில் DOT செயலாளருக்கும், DOP & PW செயலருக்கும் கடிதம் எழுத இருக்கிறார் . அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றிகள் .


மேலும் ஆந்திரா ,கர்னூல் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சஞ்சீவ் குமார்               (Dr. Sanjeev Kumar MP Karnool)அவர்களையும்



தமிழ்நாடு திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் திரு K சுப்பராயன் அவர்களையும் சந்தித்து 
 ஏழாவது சம்பளக்கமிஷன்  பரிந்துரையின் அடிப்படையில் ஓய்வூதியம் மாற்றி அமைக்கப்பட அமைச்சர் மற்றும் தொலை தொடர்பு துறை செயலரிடம் பேசவும் , கடிதங்கள் மூலம் அழுத்தம் தரவும் கோரியிருக்கிறோம்.







Thursday, 10 March 2022

FIXED MEDICAL ALLOWANCE FOR IDA PENSIONERS





CcA office issued guidelines for submission of application from pensioners residing in Non CGHS AREA TOWARDS  sanction of Fixed Monthly Allowance of Rs 1000 which will be paid along with Pension .Contacted JointCca/Dy CCA telephonically ,clarrified some doubts.1.Applications can be sent directly to CCA OFFICE also.2.IDA pensioners whose address in the PPO is in CGHS COVERED AREA whereas they have been residing in CGHS non covered area can also apply if proper support of address proof like AADHAR.3.This FMA PAYMENT of Rs 1000 is in lieu of OPD Treatment .So,surrender of MRS CARD is a must.3.This facility will be extended to CGHS CARD HOLDERS residing in Non CGHS areas in place of OPD TREATMENT .It means CGHS CARD can be used only for inpatient treatment like  hospital admission.No medicines can be obtained from Wellness centre   as per para 2(i) of ANNEXURE A.   4.Para 2(ii) if Annexure A is,by surrendering MRS CARD,without applying for CGHS card pensioner can avail FMA .No inpatient treatment facility even in case of EMERGENCY.  5.Our suggestion,apply for CGHS CARD as BSNL IS REIMBURSING .

நிர்ணயிக்கப்பட்ட மருத்துவ படி (Fixed Medical Allowance )  மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு, மாதந்தோறும் ரூபாய் 1000 அவர்கள் CGHS   மருத்துவ மனை வரம்பிற்குள் வராத பகுதிகளில் வசித்தால் (ஒவ்வொரு மாதம் மும்) ஓய்வூதிய தோடு சேர்த்து வழங்க படுகிறது. BSNL ல் இருந்து IDA சம்பளத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று 21.10.2019 ல் தொலை தொடர்பு இலாக்கா (DOT) உத்தரவினை சுட்டி காட்டி, நமது மத்திய சங்க பொதுச் செயலாளர் 02.02.2021  அன்று திரு P. K. சின்ஹா, நிதித்துறை உறுப்பினர் அவர்களுக்கு கடிதம் எழுதினார்.
உத்திரவு எண் 13-6/2020-21/BA&IT/54 to 86  04.03.2021 தேதியிட்ட உத்திரவை எல்லா தொலை தொடர்பு மாநில கணக்காயர்களுக்கும் ( Pr. CCA ) அனுப்பி ரூபாய் 1000 கொடுப்பதற்க்கான ஆயத்த பணிகளை தொடங்குமாறு அறிவுறுத்தியத்தின் அடிப்படையில்,   நமது   Jt. CCA திரு பாலசுப்பிரமணியம் அவர்களிடம் விவாதிக்க பட்டது. விரைவில் இந்த மருத்துவ படியை நமது  ஓய்வூதியர்களுக்கும்  கொடுப்பதற்கான வழி காட்டு முறையை (instructions) விரைவில் முடிவு செய்து அறிவிப்பதாக தெரிவித்து உள்ளார்.




தோழர்களே, BSNL-ல் நிலவும் நிதி நெருக்கடியான சூழலில், மேற்கண்ட உத்திரவு வந்து இருப்பது தமிழகத்தில் உள்ள CGHS   மருத்துவ மனை வரம்பிற்குள் வராத பகுதிகளில் வசிப்பவர்களுக்கு  மாதா மாதம் FMA ஓய்வூதியதோடு சேர்த்து பெறுவதற்கு நல்ல வாய்ப்பு உருவாகி உள்ளது. இது பற்றிய விவரங்களை CCA அலுவலகம் வெளியிட்ட பின் மேலும் இது குறித்து தெரிவிக்கப்படும். இந்த மருத்துவ Allowance பெறுவதற்கு BSNL  MRS  card ஐ surrender செய்ய வேண்டும். CGHS கார்டு பெற வேண்டிய தில்லை.
....Circle Secretary.

Fixed Medical Allowance பெறுதல் சம்பந்தமாக தோழர்கள் பல சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர் . அவற்றிக்கு விடையளிக்கும் விதமாக இந்த பதிவு இருக்கும் என நம்புகிறேன்.
CGHS Covered பகுதி என்பது CGHS ஆஸ்பத்திரியை  ( இதை WELLNESS Center ) என்கிறோம் சுற்றி 5 கிலோ மீட்டர்  சுற்றளவுக்கு உட்பட்ட பகுதியாகும்.





 

Wednesday, 9 March 2022

நீங்கள் SAMPANN Pensioner எனில் உங்களுக்கானசெய்தி.....

 

07/03

Recently a new functionality for transfer of pension case from one CCA to another CCA has been developed in Sampann. Pensioner will have to raise a request for transfer of his pension from one CCA to another with his login credentials.

Once the transfer request is accepted, the pensioner will receive the message to his registered mobile number

For the final approval, The pensioner will have to sign the transfer request Form which will be sent to his address physically via post or he can also download from Sampann. He has to send the transfer request Form to the concerned address given in the downloaded Form duly signed along with copy of ID, e-PPO , signatures of two witnesses

Once the case is completely processed and transferred from the current CCA to new CCA, he will receive the message to his registered mobile number.

He can now download the Digitally signed transfer authority letter from Sampann.

Vedio Link