Tuesday, 15 July 2014

15-4-2014

மத்திய சங்கச்செய்திகள் 
  • I. மாண்புமிகு ரவி சங்கர் பிரசாத், மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் மாநிலங்கள் அவையில் கூறிய செய்திகள்
  1. கடன் சுமை : (ஜூன் 2014 முடிவில்)                                                                                  BSNL: Rs 6,448; MTNL:Rs 14,760 கோடிகள்.
     2.சந்தை பகிர்வு:(2014 மே முடிவில்)
       BSNL: 
       லேண்ட் லைன்:85.61% லிருந்து 82.57 %ஆகக்குறைவு
       செல் சேவை:13.27% லிருந்து 12.3% ஆகக்குறைவு.
       MTNL

       லேண்ட் லைன்: 57.43%ஆகக்குறைவு.
       செல் சேவை:  4.83%ஆகக்குறைவு.
   3. BSNL,MTNL லில்  பொருளாதாரம் மற்றும் உபகரணம் வாங்குவதில்        உள்ள சிக்கல்கள்,மாறிவரும் தொழில் நுட்பம், வாடிக்கையாளர் சார்ந்த வணிகத்தில் கவனம்,சந்தைப்படுத்தல் மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகிய காரணங்களால் சேவைப்பரப்பை அதிகரிப்பது இயலாததாகிறது.
அரசு, மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் BSNL,MTNL நிறுவனங்களை மேம்படுத்த கீழ்காணும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
  1. BSNL லுக்கு அரசு வழங்கிய கடன் ரூ1411 கோடி தள்ளுபடி.
  2. அகண்ட அலைக்கற்றையைத்திரும்பக்கொடுத்ததற்கு BSNLலுக்கு  ரூ6724.51 கோடியும், MTNL லுக்கு ரூ4533.97 கோடியும் பொருளாதார ஆதரவாக வ்ழங்கப்படும்.
  3. இது தவிர அதிகப்படியான ஊழியர் செலவினங்கள் மற்றும் நிறுவனங்களின் சொத்துக்களை லாபமீட்டும் வ்கையில் நிர்வகித்தல்,ஆகிய ஒருங்கிணைந்த செயல் திட்டத்தின் மூலம் இந்த நிறுவனங்களை வளர்ச்சிப்பதையில் கொண்டுசெல்வதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. 
  4. BSNL,MTNL தனித்தனியே தங்கள் நிறுவனங்களை                             வாடிக்கையாளர்  சேவை மேம்பாடு சந்தைப்படுத்துதலில் நிபுணத்துவம் ஆகிய வாடிக்காயாள்ர்களை மையப்படுத்திய வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல ஏதுவாக தங்களின் நிதி ஆதாரங்களை அதிகப்படுத்தல்,வணிகத்தில்உள்ள சந்த்ர்ப்பங்களை அடையாளம் காண்தல்,நிறுவன மறு சீரமைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகின்றன.                                                                                                
  • தொலைத்தொடர்பு ஆணையத்தலைவர் மற்றும் தலைத்தொடர்புத்துறையின் செயலராக திரு. ராகேஷ் கர்க் (இ.ஆ.ப)அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • 78.2% பஞ்சப்படி க்கோப்பு  DOE க்கு இன்று (15-7-20014) அனுப்பிவைக்கப்படும் என தோழர் சித்து சிங் தெரிவித்த்ள்ளார்.
  

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.