அனைத்திந்திய ஓய்வூதியர்
சங்க கூட்டமைப்பின் 35 வது ஆண்டுப்பொதுகுழுக்கூட்டம் சென்னை தி நகர்
அலமேலுமங்காதிருமண மண்டபத்தில் 23,24-7-2014 தேதிகளில் தலிவர் திரு.K. வெங்கடாசாரி தலைமையில்நடைபெற்றது. 300 சார்பாளர்களும் 59
அழிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
முதல் நாள் (23-7-2014)
காலை நிகழ்வுகள்
தலைமை அஞ்சல்துறைத்தலைவர்
திரு T.மூர்த்தி அவர்கள் தனது தலைமையுரையில் மாநாடு வெற்றி பெற
வாழ்த்தியதுடன்,ஓய்வூதியர்கள் மனம்,உடல் மற்றும் பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகளை
மனச்சோர்வுக்கு இடம்கொடாமல், தங்களை சுறுசுறுப்பக வத்துக்கொள்வதன் மூலம் வெற்றி
கொள்ளலாம் என தெரிவித்தார்.
ப ஜ க வின் தேசிய
செயற்குழு உறுப்பினர் திரு. இல. கணேசன் அவர்கள் தனது முக்கிய உரையில்,கம்பராமாயண மேற்கோள்களுடன்,
அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெறுதல் அவசியம் என்றார். நல்லவங்கிக்கணக்கு
இருப்புடன், மன அமைதியுடன், உடல் ந்லத்தைப்பேண வேண்டுனம் என கேட்டுக்கொண்டார்.
7வது சம்பளக்குழு ஓய்வூதியர்களுக்குச்சாதகமான நல்ல பரிந்துரைகளை அளிக்கும் என தான்
நம்புவதாகட்தெரிவித்தார். இம்மாநாட்டில் ஓய்வூதியர்களின் அனைத்துப் பிரச்சினைகளும்
அலசி ஆராயப்பட்டு நல்ல தீர்வு காண விரும்புவதாகத்தெரிவித்தார்.
நோனி பயோ டெக் பி.லிட் ஐ
சேர்ந்த திரு P.I. பீட்டர் அவர்கள்
முதுமையில் இளமையுடன் வாழ அரிய பல கருதுதுக்களைக்கூறினார். பத்மஸ்ரீ Dr. V.S. ந்டராஜன் அவர்கள் நோய் எதிர்ப்பு, நோய்த்தொற்று,
நோய்த்தடுப்பு பற்றி விளக்கவுரை நிகழ்த்தினார்.
“ஓய்வூதியர் வழ்க்கறிஞர்” இதழ் துணை ஆசிரியர் திரு ராமநாராயணனின் நன்றியுரையுடன்
காலை நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
aa
அன்று மதியம் 2013-2014
ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட ஆண்டு கணக்கு படிக்கப்பட்டு ஏற்கப்பட்ட பின்
·
DA/DR அடிப்படை ஓய்வூதியத்துடன் இணைத்தல்
·
மத்திய மாநில
ஓய்வூதியர் குறைகள் விரைவில் களையப்படுதல்
·
1/1/2011 முதல் 7
வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல் படுத்தடல்
உள்ளிட்ட 110
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
போதுச்செயலர் திரு
D.பாலசுப்ரமனியன் அவர்கள் 7 வது ஊதியக்குழுவுக்கு விளக்கமளித்தல்
தொடர்பாக விரிவாக எடுப்பட்டுவரும் செயல்பாடு குறித்து விரிவாகப்பேசினார்.
24-7-2014 முழுவதும் “ஓய்வூதியர்
வழ்க்கறிஞர்” இதழ் ஆசிரியர்
ஓய்வூதியர் சங்கப்பிரதிநிதிகளுக்கு விளக்கம் அளித்தார்.
அனத்திந்திய BSNL ஓய்வூதியர் நலச்சங்க
துணைத்தலைவர் திரு D. கோபாலககிருஷ்ணன் 7வது
சம்பளக்குழு மற்றும் ஓய்வூதியர் பிரச்சினைகள் குறித்து நீண்ட உரையாற்றினார்.
தோழர் முத்தியாலு உள்ளடக்கிய
10 STR கோட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்ட இக்கூட்டம் இணைச்செயலர்
திரு N.கலிவரதன் நன்றியுரையுடன் இனிது நிறைவுற்றது.
நன்றி: STR WEBSITE.
நன்றி: STR WEBSITE.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.