Thursday 7 August 2014



ஹிரோஷிமா நகசாகி யில் குண்டு வீசப்பட்ட நினைவுதினம். 6-8-2014

6-8-2014 ஹிரோஷிமாவில் "LITTLE BOY" என்ற அணுகுண்டும்  , 3 நாட்கள் பின்னால் நாகசாகியில் "FAT MAN" என்ற அணுகுண்டும் வீசப்பட்டன.
  • அமெரிக்கத்தரப்பில் உயிரிழ்ப்புகளை குறைக்க விரைவில் ஜப்பானை சரணடைய வைக்கவேண்டும்
  •  பின்னாளில் ஜப்பானின்மீது தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்த சோவியத் யூனியன் போரில் ஈடுபடுமுன்  அணுகுண்டை பயன்படுத்தவேண்டும்.
  • உண்மையான தாக்குதலில் முதல் அணுகுண்டை ப்பயன் படுத்தி அதன் விளைவுகளை ஆராயவேண்டும் 
       என்ற காரணங்களுக்காகவும் மற்ற பிற காரணங்களுக்காகவும் அமெரிக்கா இந்த குண்டு வீச்சை நடத்த தீர்மானித்தது.
       இவை அனைத்திற்கும் மேலாக அமெரிக்கா, 
    புது மெக்சிகோவில் உள்ள ட்ர்னிடியில் 1945  ஜூலை 16ல் முதல் வறலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முதல் அணுகுண்டு சோதனையை வெற்றி கரமாக முடித்திருந்தால் ஜூலை 25 ல் ஜப்பான் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டது.

ஹிரோஷிமா நகர் சிறு குன்றுகள் பாதுகாவலாய் அமைந்த நதிப்படுகைச் சமவெளில் அமைந்துள்ளது. இந்த நகரின் மையப்பகுதியில்தான் குண்டு வீசப்பட்டது.
அதன் பாதிப்புகள்:
  1. அனல்காற்றினால் 13 ச.கி.மீ (சுமார் 5 ச.மைல்) பூரணமாக அழிக்கப்பட்டது.
  2. குண்டு வீச்சினாலும் தீயினாலும் ,63% கட்டிடங்கள் முழுவதுமாகவும், 92% கட்டுமானங்கள் அழிவிற்கோ அல்லது சிதைவிற்கோ உள்ளாயின.
  3.  மொத்த ஜனத்தொகையான 3,50,000 ல் சுமார் 1 முதல் 1,80,000 பேர் உயிரிழந்தனர்.
Hiroshima Skyline
 நன்றி:6-8-14 ல் மத்திய சங்கச் செய்தி.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.